பொன்னமராவதி, ஆக.21 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சியில் உள்ள கட்டையான்டிபட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (48). இவர் மனைவி செல்வி (46). இவர்களுக்கு பொன்னழகு (28), போது மணி (26), முத்துலட்சுமி (24) ஆகிய 3 மகள்க ளும், ஆனந்த் (23) என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் முத்துலட்சுமி, சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த காரணத் தால், இவர்களது குடும்பத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். தங்கள் குடும்பத்தை ஊரில் சேர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஜூலை 11 ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் பழனியப் பன் புகார் மனு அளித்துள்ளார். முன்னதாக பொன்னமராவதி காவல்து றையிலும், பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்திலும் இது தொடர்பாக புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிகாலை, கட்டையாண்டிபட்டி ஊரணி அருகே உள்ள பழனியப்பனின் களத்துவீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். உடனடியாக இது குறித்த பழனியப்பனின் புகாரின் பேரில் பொன்னமராவதி காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.