பெரம்பலூர், ஆக.13 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பெரம்ப லூர் மாவட்டம் ஆலத்தூர் வட்ட மாநாடு சனிக்கிழமை ஆலத்தூர் கேட் மாஸ்டர் மாளிகை கே.வரதராஜன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பி.சின்னசாமி தலைமை வகித்தார். வட்டதலைவர் தங்க ராசு, செயலாளர் கே.பச்சையா, பொரு ளாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை கோரிக்கை களை விளக்கி பேசினார். வேப்பந்தட்டை வட்ட தலைவர் சி.கோவிந்தன், செயலாளர் பி.ராமச்சந்திரன், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மகேஸ்வரி, எஸ்பிடி.ராஜாங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். அதிக வெங்காய விளைச்சல் உள்ள மாவட்டம் பெரம்பலூர். சின்ன வெங்காயத் திற்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த கஷ்டத்திற்கு தள்ளப் பட்டுள்ளனர். எனவே சின்ன வெங்காயத் திற்கு கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பாடாலூரில் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடியாக அத்திட்ட த்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரணி கிராமத்திலுள்ள பெரிய ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் விவசாயப் பணியாற்றிய தற்கு கூலியை முழுமையாக வழங்க வேண்டும். பாடாலூர் அரசு மருத்துவ மனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். சிறு உழவடை கருவி களை இலவசமாகவும் விவசாய அறுவடை இயந்திரங்களை மானியத்துடனும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் நிறைவுரை ஆற்றினார்.