ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை இன்று காலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.960 உயர்ந்துள்ளது.
தொடர்ந்து 5 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று காலை உயர்ந்தது. சென்னையில் இன்று (09-04-2025) காலை ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.66,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.65 உயர்ந்து ரூ.8,290-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், பிற்பகல் 3 மணி அளவில் மீண்டும் தங்கத்தின் விலை ரூ.960 உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.1,480 உயர்ந்து ரூ.67,280 ஆக உயர்ந்துள்ளது.