tamilnadu

img

காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர்கள் தர்ணா

காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர்கள் தர்ணா

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், என வலியுறுத்தி தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தி னர் வியாழனன்று தர்ணாவில் ஈடு பட்டனர். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தேர்தல்கால வாக் குறுதியை நிறைவேற்ற வேண்டும்.  தொகுப்பூதியத்தில் நியமனம்  செய்யும் அரசாணையை ரத்து  செய்ய வேண்டும். குடும்ப பாது காப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். சத் துணவு ஊழியர்கள் ஓய்வுபெறும் பொழுது பணிக்கொடையாக ரூ.5  லட்சம் வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் 63  ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத் துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும், உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தினர் வியாழனன்று தர்ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலை வர் கே.தேவகி தலைமை வகித் தார். மாநிலச் செயலாளர் பெ. மகேஸ்வரி, மாவட்டச் செயலாளர் ஜே.அனுசுயா, பொருளாளர் எம்.ராமன், மாவட்ட நிர்வாகிகள் ஜி. வளர்மதி, எஸ்.மஞ்சுளா ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி  பேசினர். இதில் அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை, மாவட்ட துணைத்தலை வர் ஜெயவேல், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, பொதுநூலகத்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் டி.சண்மு கம், ஓய்வுபெற்ற சத்துணவு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் சி. காவேரி, அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெருமாள் உட்பட பலர் கலந்து  கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத் தில், சத்துணவு ஊழியர் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் எஸ்.லட்சுமி  தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ்  துவக்கவுரையாற்றினார். சத் துணவு ஊழியர் சங்க மாநிலச் செய லாளர் வி.சுப்பிரமணியம், மாவட் டச் செயலாளர் ஏ.அமராவதி, அனைத்துத்துறை ஓய்வூதிய சங்க  மாவட்டச் செயலாளர் சி.ராஜ் குமார், கல்வித்துறை நிர்வாக அலு வலர் சங்க மாவட்டச் செயலாளர் கே.முத்துக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டப் பொருளாளர் எஸ்.லதா  நன்றி கூறினார். கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்  என்.பானுலதா தலைமை வகித் தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜெகநாதன் துவக்க வுரையாற்றினார். இதில் சங்கத் தின் மாநிலச் செயலாளர் ஜெ.நிர் மலா, மாவட்டச் செயலாளர் ஏ. லதா, பொருளாளர் ப.சுதா, கால் நடை பராமரிப்பு உதவியாளர் முன் னேற்ற சங்க மாநில பொதுச்செய லாளர் வி.ஜெயபால், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருணகிரி, சத்து ணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழ னிச்சாமி, மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜகோபால், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி. செந்தில்குமார் உட்பட பலர் கலந்து  கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில், சத்துணவு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் யு. பழனிசாமி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர்  ச.விஜயமனோகரன் துவக்கவுரை யாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.கண்ணன், கோரிக் கைகளை விளக்கி பேசினார். வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ரமேஷ்,  சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கண்ணன், பொரு ளாளர் கே.பாப்பாத்தி, நிர்வாகி தமிழ்செல்வி உள்ளிட்ட திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.