tamilnadu

img

நிலங்களை பூஜ்யம் மதிப்பு செய்து பத்திரப்பதிவிற்கு தடை: குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தர்

நிலங்களை பூஜ்யம் மதிப்பு செய்து பத்திரப்பதிவிற்கு தடை: குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தர்

குடியிருப்புவாசிகள் வழிவகையாக கிரையம் பெற்று அனுபவித்து வரும் நிலங்க ளை பூஜ்யம் மதிப்பு செய்து பத்திரப்பதி விற்கு தடை ஏற்படுத்தி வரும் அறநிலையத் துறை மற்றும் வஃக்பு போர்டு நடவடிக்கை களை திரும்ப பெற்று, வழக்கமாக பத்திரப்ப திவு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாழனன்று,  குத்தகை  விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்  திருப்பூரில் தர்ணா போராட்டம் நடைபெற் றது. கோயில், மடம், அறக்கட்டளை, வஃக் போர்டு, இனாம் நிலங்களில் குடியிருப்ப வர்கள், சாகுபடி செய்பவர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அடிமனை பய னாளிகள்,  குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு  சங்கத்தின் சார்பில் மாநில தழுவிய தர்ணா  போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது. அதன்படி வியாழனன்று திருப்பூர் அரி சிக்கடை வீதியில் உள்ள இந்து சமய அறநி லையத்துறை உதவி ஆணையர் அலுவல கத்தின் முன்பு மாவட்டத் தலைவர் சி.சுப்பிர மணியம் தலைமையில் தர்ணா போராட்டம்  நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செய லாளர் பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு அடிமனை பயனாளி கள் குத்தகை விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் ஆர்.வெங்கட்ராமன்,  மாவட்டக்குழு உறுப்பினர் பி‌.வேலுச்சாமி,  அனைத்து வகையான மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின்  மாவட்ட தலைவர் த.ஜெயபால் ஆகியோர்  கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  இதில், குடியிருப்பு வாசிகள் வழிவகை யாக கிரையம் பெற்று அனுபவித்து வரும்  நிலங்களை பூஜ்யம் மதிப்பு செய்து பத்திரப் பதிவிற்கு தடை ஏற்படுத்தி வரும் அறநிலை யத்துறை மற்றும் வஃக்போர்டு நடவடிக்கை களை திரும்ப பெற்று வழக்கமாக பத்திரப்ப திவு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும். பயனாளிகளுக்கு எவ்வித நிபந் தனையும் இன்றி மின் இணைப்பு மற்றும்  வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்து  கொடுக்க வேண்டும். 2019 ல் வெளியிடப்பட்ட  அரசு ஆணை 318 ஐ செயல்படுத்த சட்டமன் றத்தில் அறிவித்தபடி சீராய்வு மனுவை உட னடியாக தாக்கல் செய்ய வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் சி.ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.