education

img

நீட் தேர்வுக்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் பேச்சு!

சென்னை,ஏப்.09- நீட் தேர்வுக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர், அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். 
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; நீட் தேர்வு விலக்கு கோரி நாம் நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதனால், நம்முடைய போராட்டம் எவ்விதத்திலும் குறையப்போவதில்லை. சட்டப் போராட்டம் தொய்வின்றி தொடரும் . என பேசினார்.