தஞ்சாவூர், ஜூன் 17- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாட்டில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு வியாழனன்று நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் எஸ்.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் டி.மோகனதாஸ் வேலை அறிக்கை வாசித்தார். விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் துவக்க உரையாற்றி னார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கு.பாஸ்கர், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.உமா, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.பெர்னாட்சா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் நிறைவுரை ஆற்றினார். மாநாட்டில், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவராக மெய்க்கப்பன், செயலாளராக மோகனதாஸ், பொரு ளாளராக ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. ஒரத்தநாடு பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைத்திட வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும். விதைகள், உரம் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். ஒரத்தநாடு பகுதி யில் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் வழங்க வேண்டும். கடைமடை வரை தண்ணீர் சென்றிட வழிவகை செய்திட வேண்டும். கொப்பரைத் தேங்காய்க்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்து, தாமதமின்றி பணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.