புதுக்கோட்டை, ஜூன் 24 - சிறு, குறு தொழில் செய்வதற்கு வசதியாக கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென மாற்றுத் திறனாளி கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள னர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய மாநாடு அன்னவாசலில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. மாநாட்டிற்கு எஸ்.சோலையப்பன் தலைமை வகித்தார். எம்.ஜோஷி வர வேற்றார். எம்.சி.லோகநாதன் கொடியேற்றி னார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்டச் செயலாளர் கே.சண்முகம் உரையாற்றினார். சிபிஎம் அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கிரிஜா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புரா ஜன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் தலை வராக ராதிகா, செயலாளராக சசிகுமார், பொரு ளாளராக லோகநாதன், துணைத் தலை வர்களாக கணேசன், திருநாவுக்கரசு, துணைச் செயலாளர்களாக அந்தோணி, சண்முக சுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் அருகில் மாற்றுத்திற னாளிகளுக்கு கடைகள் வைக்க இடம் ஒதுக்கித் தர வேண்டும். சிறு, குறு தொழில் செய்வதற்கு வசதியாக கடன் வழங்க வங்கி களுக்கு அரசு பரிந்துரை செய்ய வேண்டும். தேசிய வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வருடத்திற்கு நூறு நாள் வேலையும், முழுமையான கூலி ரூ.283 வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 4 அல்லது 5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். விண்ணப் பித்துள்ள அனைவருக்கும் உதவித்தொகை யும், வீடு இல்லாதவர்களுக்கு வீடும், வீட்டு மனைப் பட்டாவும் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.