சிவகங்கை,மார்ச்.25- அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்றிரவு பணி முடிந்து விடுதிக்குத் திரும்பிய போது பெண் பயிற்சி மருத்துவர் மீது முகத்தை மூடிய சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.