world

img

ட்ரம்பிற்கு மீண்டும் சீனா பதிலடி!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 84% வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அண்மையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக பட்சமாக 50% வரி விதித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சீனா, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்கள் மீது 34% வரி விதித்தது.

இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இன்று முதல் 104% வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இதற்கு மீண்டும் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 84% வரியை சீனா விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு நாளை (ஏப்ரல் 10) முதல் அமலுக்கு வருகிறது. இதன் அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நிலவி வருகின்றது.

அதேபோல், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26% வரியை டொனால்டு ட்ரம்ப் விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.