world

img

தீக்கதிர் உலக செய்திகள்

மக்ரோன் மீது ஊழல் குற்றம் சாட்டியவர் மர்ம மரணம்

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மீது ஊழல் குற்றச் சாட்டை முன் வைத்த குடியரசுக் கட்சி முன்னாள் தலை வர் ஆலிவர் மார்லெக்ஸ் மர்ம மான முறையில் மரணமடைந்துள் ளார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அரசு கூறி வருகிறது. 2014 ஆம் ஆண்டு அல்ஸ்டோம் எரிசக்தி அமைப்பை ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதில் ஊழல் நடத்துள்ளது. அப்போது நிதியமைச்சராக இருந்த மக்ரோனுக்கும் இதில் தொடர்பு உள்ளது என பல கேள்விகளை அவர் எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. 

இனப்படுகொலை குற்றவாளி நேதன்யாகு  டிரம்ப்புக்கு நோபல் பரிந்துரை

இனப்படுகொலை குற்றவாளியான இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, டிரம்புக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என பரிந்துரைத்து கடிதம் கொடுத்துள்ளார். சில நாட்களுக்குமுன் நேதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டை இஸ்ரேல் நீதிமன் றம் விசாரிக்கக் கூடாது என அழுத்தம் கொ டுத்ததுடன் பாலஸ் தீனர்களை இனப் படுகொலை செய்ய தேவையான அனை த்து உதவிகளையும் இஸ்ரேலுக்கு செய்து வந்தார் டிரம்ப். இந்நிலையில் அவரை சந்திக்க அமெரிக்கா சென் றுள்ள நேதன்யாகு இந்த கடிதத்தை டிரம்ப்பிடம் கொடுத்தார்.  

தொழிலாளர்கள் பற்றாக்குறையே  டெக்சாஸ் வெள்ளத்திற்கு காரணம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு வானிலை ஆய்வு மைய பணியா ளர்கள் பற்றாக்குறையே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் செலவு குறைப்பு என்ற பெயரில்அதிக பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியதால் முறை யாக வானிலை களை கணிப்பதில் பிரச்சனை எழுந்துள் ளது என டிரம்ப் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெள் ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 100 க்கும் மேலாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

“இஸ்ரேல் என்னை கொல்ல முயன்றது”  ஈரான் ஜனாதிபதி அதிர்ச்சித் தகவல் 

இஸ்ரேல் தன்னைக் கொலை செய்ய முயன்றது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான் குற்றம் சாட்டி யுள்ளார். எனினும் அந்த சதித்திட்டம் ஈரான் உளவுத் துறையால் முறிய டிக்கப்பட்டது.டிரம்ப் பின் நெருங்கிய நண் பரான தீவிர வலது சாரி பத்திரிகையா ளர் டக்கர் கார்ல்ச னுக்கு கொடுத்த நேர்காணலில், ஒரு பேச்சுவார்த்தை கூட்டத்தில் அவர் பங்கேற்று இருந்த போது அவர் மீது இஸ்ரேல் குண்டு வீச திட்டமிட்டதை முன்னரே கண்டறிந்து தப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார். 

ஹமாஸ் தாக்குதல் : இஸ்ரேல் ராணுவத்தினர் பலி

காசாவின் பெய்ட் ஹனூனில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் சிலர் பலியாகி யுள்ளனர். படுகாயமடைந்துள்ள மற்றும் பலியான மொ த்த வீரர்களின் எண் ணிக்கை 20 இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் வீரர்கள் பயணித்த பீரங் கிக்குள் ஹமாஸ் வீரர் ஒருவர் கையெறி குண்டு  வீசியதில் 7 வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.