districts

img

சிபிஎம் வாஞ்சியூர் கிளை அமைப்பு கொடியேற்று விழா

மன்னார்குடி, பிப்.6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வாஞ்சியூர் கட்சி கிளை அமைப்பு மற்றும்  கொடியேற்று விழா  ஞாயிற்றுக்கிழமை வாஞ்சியூர் கிராமத்தில் நடைபெற்றது. மன்னார்குடி ஒன்றியக் குழு சார்பாக நடைபெற்ற இவ்விழாவிற்கு, கவியர சன் தலைமை வகித்தார். கட்சிக் கொ டியை மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி ஏற்றி வைத்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.குமாரராஜா, மன்னார்குடி நகர செயலாளர் ஜி.தாயு மானவன், ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகுபதி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.  கவியரசன் தலைமையில் வாஞ்சியூ ரைச் சேர்ந்த பத்து பேர் பல்வேறு இயக் கங்களிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர். அவர்களை மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.குமாரராஜா செந்துண்டு அணி வித்து வரவேற்றனர். பி.திருநீலகண்டன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சிஐடியு இணைப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.