மதுரை, பிப்.24- தமிழக முதல்வரின் இலவச மருத்துவக் காப் பீட்டு அட்டைப் பெறுபவர் கள் தொடர்ந்து அலைக் கழிக்கப்படு கின்றனர். இந்தப் பிரச்சனையை உட னடியாகச் சரி செய்யக் கூடு தல் கணினிகள், போதுமான ஊழியர்கள் அவசியம் என்கின்றனர் பயனாளிகள். தமிழக முதல்வரின் இல வச மருத்துவக் காப்பீட்டு அட்டை புதிதாகப் பெற விரும்புவோர் மதுரை ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு வருகின்றனர். தினம்தோ றும் சுமார் 200 பேர் வரு கின்றனர். இவர்களில் அதிகம் பட்சம் 55 பேருக்கே அட்டை வழங்கும் நிலை உள்ளது. மற்றவர்களுக்குத் தேதி குறிப்பிட்டு அனுப்பி விடுகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையில் காப்பீட்டு அட்டை மூலம் அறுவை சிக்சை, உயிர் காக்கும் சிகிச்சைக்கு வரு வோர் நிலை கவலைக்குரி யதாக மாறியுள்ளது. இது குறித்து, மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கருப்புசாமி கூறுகையில், அவனியாபுரம் மருத்துவர் காலனியைச் சேர்ந்த முத்துக் குமார் மனைவி பாண்டியம் மாள் அறுவைச் சிகிச்சைக் காக மதுரையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்குப் புதி தாக மருத்துவக் காப்பீடு அட்டை கேட்டு வந்துள் ளோம். நோயாளியின் நிலை, அவருக்குச் செய்ய வேண்டிய சிகிச்சை, மருத் துவமனை சீட்டு ஆகிய வற்றுடன் வந்துள்ளேன். போதுமான ஊழியர்கள், கணினிகள் இல்லாததால் நாளொன்றுக்கு 55 பேருக்கு அட்டை வழங்குவதற்கே வாய்ப்புள்ளது எனக் கூறிக் குறைந்தது இரண்டு நாள் முதல் 10 நாட்கள் வரை ஆகும் எனக் கூறி தேதி யைக் குறித்து அனுப்புகின்ற னர். தனியார் மருத்துவ மனைகள், அரசு மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பெறுபவர்கள் என்ன ஆவார் கள். காப்பீடு அட்டைக்காக அவசரமாகச் செய்ய வேண்டிய அறுவைச் சிகிச் ்சையை நிறுத்த முடியுமா? எனக் கேள்வியெழுப்பினார். இவரைப் போல புதிய அட் டைக்காக ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.