tamilnadu

img

மோடியின் ‘500 ரூபாய்’ அலைக்கழிப்பு... வங்கிக்கு 30 கி.மீ. நடந்து சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பெண்!

ஆக்ரா:
உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்மாவட்டத்தில் கிம்மத்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், கர்வீர். இவருடையமனைவி ராதா தேவி (50). இவர்களுக்கு15 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

ஆக்ரா அருகே உள்ள சாம்பு நகர்பகுதியில் தங்கி கூலி வேலை செய்துவரும் இவர்கள், இந்த வேலைக்காக சொந்த ஊரைவிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே குடிபெயர்ந்து வந்துவிட்டனர்.இந்நிலையில் அவர்கள் வசித்து வரும் குடிசைப் பகுதியில், ஒரு செய்திபரவியுள்ளது. அதாவது, ஏழை எளியமக்களுக்கு பிரதமர் மோடி ‘ஜன்தன் யோஜனா‘ திட்டத்தின் கீழ் 500 ரூபாயைவங்கிக் கணக்கில் போட்டுள்ளார் என் பதே அந்த செய்தியாகும்.வறுமையில் இருந்து வந்த ராதாதேவி, இதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

பச்சோகரா என்ற இடத்தில் இருக்கும் ஸ்டேட் வங்கியில் ராதாதேவிக்கு கணக்கு உள்ளது. அவர், அங்கு சென்று ரூ.500-ஐ எடுத்துவர முடிவு செய்தார். இந்த வங்கி, தற்போது குடியிருக்கும் இடத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர்தூரத்தில் உள்ளது. எனினும் வயிற்றுப்பாட்டைக் கருதி, பேருந்து ஓடாவிட்டாலும், நடந்தே சென்றாவது பணத்தை எடுத்துவர தீர்மானித்தார்.ராதாதேவிக்கு நிமிர்ந்து நடக்க முடியாது. கூன் முதுகு. அதைப் பொருட் படுத்தாமல், தன்னுடைய 15 வயது மகனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு30 கி.மீ. தூரம் நடந்தே வங்கிக்கு சென்றார். அங்கு, சியாம் பதக் என்ற ஊழியரிடம், விபரத்தை சொல்லி, ரூ. 500-ஐ எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வங்கிக் கணக்கை சரிபார்த்த அந்த ஊழியர், கணக்கில் பணம்  ஏதும் இல்லை.உங்கள் கணக்கு பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தோடு இணைக்கப்படவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ராதாதேவி, மிகுந்தவிரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார். “கடந்த 2 மாதங்களாக உடல்நிலைசரியில்லை. வேலைக்கும் செல்லவில்லை” என்று அழாத குறையாக ராதாதேவி கூறியதைக் கேட்ட  வங்கி ஊழியர், தனது கைப்பணத்தை கொஞ்சம் ராதாதேவிக்கு கொடுத்து, அனுப்பி வைத்துள்ளார். மீண்டும் 30 கிலோ மீட்டர்தூரம் நடந்தே ராதாதேவி வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.மோடி அறிவித்த 500 ரூபாய்க்காக, சுமார் 15 மணிநேரம் நடையாய் நடந்து,60 கி.மீ. தூரம் சென்ற ராதாதேவியின் துயரக் கதை, ஊடகங்களில் வெளியாகி பலரையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.