மதுரை, ஜூலை 5- மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் 4 ஆயிரம் சதுர அடியில் நவீன வசதி களுடன் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் பிர சாத தயாரிப்புக் கூடம் புனரமைக்கப்பட்து. கோவில் மலை பாதை செல்லும் வழி யில் ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா மேம்படுத்தப்பட்டது. ஜூலை 5 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வணிகவரி-பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “அழ கர்கோவிலில் நாள் முழுவதும் அன்ன தானம் வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்பட்ட உள்ளது. ஒரு மாதத்தில் ராஜ கோபுரத்திற்கும், அடுத்த இரண்டு மாதத்தில் கள்ளழகருக்கும் குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 764 கோயில் களில் 501 கோயில்களுக்கு ஒன்றிய அரசின் தர சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. அதிகமாக தரச்சான்று பெற்ற ஒரே மாநி லம் தமிழ்நாடு. மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தால் சேதமடைந்த மண்டபத்தை இரண்டு ஆண்டுகளில் புனரமைத்து, அதனைத்தொடர்ந்து கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தும் பணிகளையும் தினமும் கண்காணித்து வருகிறோம். அழகர்கோவில் மலையில் சாலை அமைக்கும் பணிகளுக்கான வனத்துறை அனுமதி பெறப்பட்டு ஓரிரு நாளில் பணி கள் துவங்கும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சி தர் - பக்தர் உறவு சுமூகமாக இல்லா விட்டால் அதை கேட்கும் உரிமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உண்டு என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்துசமய அற நிலைத்துறை ஆணையாளர் முரளி தரன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப் பினர் வெங்கடேசன், மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் மணிமாறன், இணை ஆணையர் செல்லதுரை, அழகர் கோவில் துணை ஆணையர்/செயல் அலுவலர் ராமசாமி, இந்து அறநிலை துறை மதுரை மண்டல செயற்பொறியா ளர் சந்திரசேகர், மதுரை உதவி கோட்ட பொறியாளர் இந்து அறநிலைய துறை தனிக்கொடி, அழகர் கோவில் பொறி யாளர் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், அ.வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, அழ கர்கோவில் கிளை செயலாளர் முத்து பொருள், பேஸ்கர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.