ஒட்டன்சத்திரம், ஜூன் 20- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட், தென்னிந்தியாவிலேயே இரண்டாவது பெரிய மார்க்கெட்டாக திகழ்கிறது. இந்த மார்க்கெட் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டன்சத்திரம் பேருந்து நிலை யம் அருகே செயல்பட்டு வருகிறது. தமி ழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் அதிக அளவில் தாங்கள் விளைவித்த காய்கறிகளை ஒட்டன்சத்தி ரம் காந்தி காய்கறி மார்கெட்டிற்கு கொண்டு வந்து விலை நிர்ணயம் செய்வர். இங்கிருந்து காய்கறிகள் தினமும் சுமார் ஆயிரம் டன் அளவில் தமிழ்நாடு முழுவதும், கேரளா, ஆந்திரா, கர் நாடகா, பூனா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப் பட்டு தினமும் சுமார் ரூ.5 கோடி வர்த்த கம் நடைபெற்று வருகிறது. தற்போது பெருகி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப கட்டிடம் விரிவாக்கம் செய்வதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோர் ஏற்பாட்டின் பேரில், உணவு- உணவுப்பொருள் வழங் கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தீவிர முயற்சியால் நடந்த முடிந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் ரூ.29 கோடி செலவில் நவீனமயமாக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார். இதன் அடிப்படையில் அர சாணை வெளியிடப்பட்டு, தற்போது அதி நவீன வசதிகளுடன் வியாபாரிகளு ககான கடைகள், உணவகம், போக்கு வரத்து இடையூறு இன்றி வாகனங்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழி, வாகனம் நிறுத்துமிடம், வங்கி சேவை, ஏ.டி.எம்.மையம், காவல் உதவி மையம், நிழற்குடை, குடிநீர் சேவை, மழைநீர் வாய்க்கால், கழிப்பறை வசதி, வெளியூரிலிருந்து வந்துசெல்லும் வியாபாரிகள் தங்கிச் செல்வதற்காக தங்கும் விடுதிகள், தடையில்லா மின்சார வசதி, அன்றாட சேகாரமாகும் மார்க்கெட் குப்பைக்கழிவுகளை நவீன இயந்திரங்கள் வசதியுடன் தினமும் சுத் தம் செய்யும் வசதி உள்ளிட்ட அதி நவீன வசதிகளுடன் தற்போது மார்க்கெட்டுக் கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.