districts

வஞ்சிபாளையம் உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்தாமல் தாமதிப்பது ஏன்?

அவிநாசி அருகே வஞ்சிபாளை யம் அரசு மேல்நிலைப் பள்ளியை தரம் உயர்த்துவது எப்பொழுது என  பொதுமக்கள் கேள்வி எழுப்பி வரு கின்றனர். அவிநாசி ஒன்றியம், புதுப்பா ளையம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சி பாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளி இருக்கிறது. மங்கலம் சாலை யில் அமைந்துள்ள இப்பள்ளி வளா கத்தில் ஒன்றாம் வகுப்பு முதல்  ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளி தனியாகவும், ஆறு முதல்  பத்தாம் வகுப்பு வரை உயர்நிலைப்  பள்ளி தனியாகவும் இருக்கிறது. 1954ஆம் ஆண்டு முதல் ஆரம்பப் பள்ளி செயல்படுகிறது. தொடர்ந்து  1969இல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை  நடுநிலைப் பள்ளியும், 2010 முதல்  10ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்தி  உயர்நிலைப் பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கு 2013  முதல் ஆங்கில வழிக் கல்வியும் இருக்கிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப் பில் மட்டும் 70 மாணவ, மாணவி கள் படித்து  வருகின்றனர். இப்பள் ளியைத் தரம் உயர்த்த தொடர்ந்து  10 ஆண்டுகளுக்கு மேலாக இப்ப குதி மக்கள் கோரி வருகின்றனர். இங்கு 10ஆம் வகுப்பு வரை படித்த வர்கள் 11, 12ஆம் வகுப்புகளுக்கு அவிநாசி அல்லது அருகாமை ஊர் களுக்குச் செல்ல வேண்டியிருக் கிறது. இதனால் இப்பகுதி பெண் குழந்தைகள் கல்வி பயில்வது பாதிக்கிறது. அதேபோல ஆண்  குழந்தைகள் குறித்த நேரத்திற்கு பேருந்து வசதிகள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இதனால் அவர் களின் கல்வியும் பாதிக்கிறது. இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த, அப்பகு தியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பி. முத்துச்சாமி தலைமையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவரும், முன்னாள் மாநிலங்க ளவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் மூலம்  அதிமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம்  கோரிக்கை மனு அளித்தனர். அதே போல இவர்கள், திமுக ஆட்சிக்கு  வந்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பி னர் சின்னத்துரை மூலம், துறை  அமைச்சருக்கும், அதிகாரிக ளுக்கும் மனு அளித்தனர். எனினும்  தரம் உயர்த்துவது இன்னும் கேள் விக்குறியாகவே இருக்கிறது. இதுகுறித்து கல்விக் குழு  தலைவர் பி.முத்துசாமி கூறுகை யில், பள்ளியைத் தரம் உயர்த்த இரண்டு லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும், இந்தப் பண மும் கட்ட தயாராக இருக்கிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் தரம் உயர்த்த மனு அளித்து விரிவாகப்  பேசியிருந்தோம், ஆனால் மேல் நிலை ‌பள்ளியாக தரம் உயர்த்த வில்லை. இப்பகுதியில் தொழிற்சா லைகள் ஏராளமாக வந்துவிட் டன. திருப்பூர் எல்லைக்கும் வஞ்சி பாளையம் பகுதிக்கும் மூன்று  கிலோமீட்டர் மட்டுமே இருக்கி றது. ஆனால் இப்பள்ளியைத் தரம்  உயர்த்த ஏன் தயக்கம் காட்டுகி றார்கள் என்று தெரியவில்லை. அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்த  வேண்டும்” என்று கூறினார். அப்பகுதியைச் சேர்ந்த அருள்  கூறுகையில், நான்கு கிலோமீட்ட ருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் ஆனால், எங்கள்  பகுதி குழந்தைகள் 8 கிலோமீட்டர்  சென்று கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. போதுமான பேருந்து வசதி இல்லை. பல  ஆண்டுகள் போராடியும் தரம்  உயர்த்தாமல் இருந்து வருகின்ற னர். தற்போது வரை காலை நேரங் களில் 150-க்கும் மேற்பட்ட குழந்தை கள் அவிநாசி, அனுப்பர்பாளை யம், திருப்பூர் நஞ்சப்பா பள்ளி, ஜெவாபாய் பள்ளி உள்ளிட்ட பள்ளி களுக்கு பேருந்தில் நின்று கொண்டே செல்லும் அவல நிலை  இருக்கிறது, பின்தங்கிய மக்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பு அறிவு  பெற, ஏழை குழந்தைகள் கல்வி  மேம்படுத்த உடனடியாக பள்ளி யைத் தரம் உயர்த்த வேண்டும் என்றார்.  பெற்றோர் தேவராஜ் கூறுகை யில், இரண்டு குழந்தைகள் கல்வி  பயின்று வருகிறார்கள், ஒரு குழந்தை 9ஆம் வகுப்பு, மற்றொரு  குழந்தை ஏழாம் வகுப்பு படித்து  வருகின்றனர். இங்கு 10ஆம் வகுப்பு முடித்தவுடன் மேல்நிலை கல்வி பயில்வதற்கு மங்கலம், 65  வேலம்பாளையம் அல்லது அவிநா சிக்கு செல்ல வேண்டிய நிலை உள் ளது. குறித்த நேரத்திற்கு பேருந்து  வசதி இல்லை. இதனால் பெரும் பகுதியினர் எங்கள் பகுதியில் பத்தாம் வகுப்புடன் நின்று விடுகின் றனர். பலரும் விவசாயம், விசைத் தறி மற்றும் பல்வேறு வேலைக்கு செல்கின்றனர். எனவே உடனடி யாக மேல்நிலைப் பள்ளியாக தரம்  உயர்த்த வேண்டும் என கூறினார்.  தங்கவேல் கூறுகையில், கணி யாம்பூண்டி, புதுப்பாளையத்தில் மொத்தம் 17 ஆயிரம் மக்கள் தொகை இருக்கிறது. இங்குள்ள பிள்ளைகள் 10 ஆம் வகுப்பு முடித் தபின், மேல்நிலைப் படிப்பிற்கு மங் கலம், அவிநாசி, திருப்பூருக்கு செல்ல வேண்டியுள்ளது.  தொலை தூரம் செல்ல வேண்டிய காரணத் தால் பலர் படிப்பை நிறுத்தி விடு கிறார்கள். பொருளாதார அடிப்ப டையிலும் பாதிக்கப்படுவதால் படிப்பை தொடர்ந்து கொண்டிருக் கும் குழந்தைகளும் இடையில் நின்று விடுகின்றனர். தற்பொழுது கூட வஞ்சிபாளையம் பள்ளியில் 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி  அடைந்துள்ளனர். இவர்கள் நலன் கருதி தமிழக அரசு உடனடியாக மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்றார்  விரிவடைந்து வரும் வஞ்சிபா ளையம் பகுதி மக்கள் குரலுக்கு  செவி சாய்க்க அரசு நிர்வாகமும், கல்வித் துறையும் அலட்சியம் காட் டுவது ஏன்? என்பதே மக்களின் ஏகோ பித்த கேள்வியாக உள்ளது. (ந.நி)