districts

img

நலிவடையும் மண்பாண்ட தொழில்: நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.11- நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி யுள்ள நிலையில், மண் எடுக்க முடியா ததால், மழைக்கால நிவாரணம்  வழங்க வேண்டும், என மண்பாண்ட  தொழிலாளர்கள் வலியுறுத்தியுள் ளனர். பொங்கல் பண்டிகை கொண்டா டப்பட உள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் அரூர், அச்சல்வாடி, கொங்கவேம்பு உள்ளிட்ட பகுதிக ளில் மண்பானைகள் தயாரிக்கும் பணிகளில் மண்பாண்ட தொழிலா ளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற னர். மண்பாண்ட தொழிலாளர்கள் நலன் கருதி, ஏரியில் இருந்து மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கி னாலும் கூட, கடந்த இரண்டு மாதமாக பெய்த மழையால் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தி லும் தண்ணீர் நிரம்பி காணப்படுகின் றன. இதனால் மண்பாண்ட தொழி லாளர்கள் மண் எடுக்க முடியாமல் பெரும் இன்னல்களுக்கு தள்ளப்பட் டுள்ளனர். ஒரு சிலர் இத்தொழிலை கைவிட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வருடத் திற்கு ஒருமுறை மண் பானை விற் பனை என்றால், அது பொங்கல் மட் டும்தான். இதனை நம்பியுள்ள தொழி லாளர்களுக்கு மழைக்கால நிவார ணம் வழங்க வலியுறுத்தி பலமுறை தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தற்போது பெய்த மழை யால் 200 பானை செய்யும் இடத்தில் 100 பானை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி  மண்பானை செய்வதற்கான இடுப் பொருட்களுக்கான செலவுகள் என கணக்கீடு செய்து விற்பனை செய்யும் பொழுது, அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை என்பதால்  ஒரு சிலர் மண்பானை இல்லாமல் சில்வர் பாத்திரங்களில் பொங்கல்  வைத்து கொண்டாடிக் கொள்கி றோம் என வியாபாரிகளிடம் தெரி வித்து செல்கின்றனர். எனவே, மண்பாண்ட தொழிலா ளர்களுக்கு மழைக்கால நிவாரணம்  வழங்க வேண்டும். இத்தொழிலை  ஊக்குவிக்கும் வகையில் அரசு நல்ல பல திட்டங்களை செயல்படுத்த  முன் வர வேண்டும் என மண்பாண்ட  தொழிலாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.