districts

img

சேடபாளையம் யுனிவர்சல் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலக் கொண்டாட்டம்

திருப்பூர், ஜன. 11 - திருப்பூர் யுனிவர்சல் பள்ளிக்குழுமத்தின் பொங்கல் விழா, ஆண்டு விழா மற்றும் பரிச ளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா சேடபா ளையம் பள்ளி வளாகத்தில் கோலாகல மாகக் கொண்டாடப்பட்டது. திருப்பூர் வெள்ளியங்காடு, வேலன் நகர்  மற்றும் சேடபாளையம் ஆகிய மூன்று இடங்க ளில் அமைந்துள்ள யுனிவர்சல் பள்ளிகளின்  மாணவ, மாணவிகள், பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்த விழா வெள்ளியன்று நடைபெற்றது. பெற்றோர்கள் பொங்கல் வைத்ததுடன்,  பெற்றோர்களுக்கான போட்டிகளில் பங் கேற்று மகிழ்ந்தனர். சுமார் ஐந்தாயிரம் பேருக் குமத்தியில் 1000 பள்ளி மாணவிகள் கும்மி அடிக்க, 200 மாணவர்கள் ஒயிலாட்டம் ஆட  பல கலை நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சிப் பெரு வெள்ளத்துடன் அரங்கேறின. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக,  யுனிவர்சல் பள்ளிக் குழுமத்தை தனது கடின  உழைப்பால், கட்டமைத்து உருவாக்கிய பள் ளியின் நிறுவனர் அமரர் எஸ்.ராஜகோபா லின் நினைவைப் போற்றும் வகையில், 200  நபர்களின் படைப்புகளைத் தொகுத்து ‘வீழ் வேனென்று நினைத்தாயோ’ என்ற நினைவு  மலர் வெளியிடப்பட்டது.  இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட சிறப்பு நீதிபதி டி.பாலு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.உத யகுமார் ஆகியோர் வருகை புரிந்து வாழ்த் திப் பேசினர். மாணவர்களும், பெற்றோர்க ளும் இன்றைய காலங்களில் எவ்வாறு செயல் பட வேண்டும் என்பதை பற்றியும், மாணவர் களின் ஒழுக்கம், ஆரோக்கியம் பற்றியும் உரையாற்றினர். இதை தொடர்ந்து,  கல்வியிலும், விளை யாட்டு போட்டிகளிலும் சாதனை புரிந்த மாண வர்களுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற் றது. விழாவுக்கு வருகைபுரிந்த விருந்தி னர்கள் பங்கேற்றுப் பரிசளித்து சிறப்பித்த னர். இதே மேடையில், கடந்த கல்வி ஆண்டில்  (2023-2024) பிளஸ் டூ அரசுப் பொதுத் தேர்வில்  600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநிலத் தில் முதல் இடம் பிடித்த யுனிவர்சல் பள்ளி  மாணவி ஈ.மகாலட்சுமிக்கு பள்ளி நிர்வாகம்  சார்பாக பாராட்டுத் தெரிவித்து, ஸ்கூட்டி  இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட் டது. இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு 1 கிராம் தங்கம்  வழங்கியும் சிறப்பிக்கப்பட்டனர். பள்ளி வளா கத்தில் புத்தக அரங்கம், சிற்றுண்டி அரங்கம்  உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, கவனத்தை  ஈர்க்கும் அழகிய வாசகங்கள் அனைவரை யும் கவர்ந்தன. இப்பள்ளி விழா பெற்றோர் கள், மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் குடும்ப விழாவாக யுனிவர்சல் பள்ளி முப்பெ ரும் விழா நடைபெற்றது. விழாவுக்கான ஏற் பாடுகளை பள்ளி தாளாளர், முதல்வர் ஆசிரி யர்கள், நிர்வாகப் பணியாளர்கள் உள்ளிட் டோர் செய்திருந்தனர்.