districts

ஏற்றுமதி கட்டணத்தை குறைக்க திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், பிப்.11- சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்போது. ஏற்படும் கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என  திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வலியு றுத்தியுள்ளது.  லாஜிஸ்டிக் மற்றும் ஏற்றுமதி துறை களை சார்ந்த முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் வகையில் கார்கோ கனெக்சன்ஸ் கான்களேவ் (மாநாடு) -2025 கோவையில் நடைபெற்றது. இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங் கத்தின் பொதுச்செயலாளர் திருக்கும ரன் கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவில் சிறு குறு நடுத்தர பின்ன லாடை உற்பத்தி மையமாகவும் பசுமை  சார் ஆடை உற்பத்தி மையத்தில் ஒன்றா கவும் திருப்பூர் முக்கிய பங்காற்றி வரு கிறது.  திருப்பூரில் 90 சதவிகிதம் சிறுகுறு  நிறுவனங்கள் மற்றும் வளம் குன்றா  வளர்ச்சிக்கு தொழில்துறை நடைமுறை களில் முன்னோடியாகவும் திருப்பூர் உள்ளது. ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை செயல்படுத்திய இந்தியாவில் முதல்  மாவட்டமாக திருப்பூர் உள்ளது. ஒரு  நாளைக்கு 13 கோடி லிட்டர் தண் ணீரை 96சதவிகிதம் மறு பயன்பாட்டு விகிதத்துடன் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் முன்னேற்றங்களை அடைந்துள்ளது. காற்றாலைகள் மூலம்  2000 மெகாவாட் மின்சாரத்தையும், சோலார் மூலம் 250 மெகாவாட் மின் சாரத்தையும் உற்பத்தி செய்கிறது. இதில் 350 மெகா வாட் தொழில்துறை  நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படு கிறது. உபரி மின்சாரம் தமிழ்நாடு மின் சார வாரியத்திற்கு வழங்கப்பட்டு வரு கிறது. 22 லட்சம் மரங்களை நட்டு காடு  வளர்ப்பு முயற்சிகளை திருப்பூர் தொழில்துறை மேற்கொண்டு வருகி றது.  திருப்பூரில் லாஜிஸ்டிக் துறையில் மிகப்பெரிய சாத்திய கூறுகள் உள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பல லாஜிஸ்டிக் சவால்கள் உள்ளது. 15  நாட்களுக்கு ஒரு முறை மாறும் ஏற்ற  இறக்கமான லைனர் செலவுகளும்  உள்ளது. கூடுதலாக இந்தியாவி லிருந்து நேரடி கப்பல் இல்லாததால் ஏற்றுமதியாளர்கள் கொழும்புவை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப டுகிறது.  இது செயல்திறன் மற்றும் உலக ளாவிய சந்தை போட்டித் தன்மையை  பாதிக்கிறது. முன்னதாக ஐரோப்பா விற்கு நேரடி கப்பல் இயக்கப்பட்டு வந்த  நிலையில், இந்த சேவை கடந்த 1ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதனால் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி கட்ட ணங்கள் அதிகரித்திருத்துள்ளது.  ஏற்றுமதியாளர்களுக்கு பயனளிக் கும் மற்றும் செயல்பாடுகளை நெறிப் படுத்தும் வகையில் ஒரு பொதுவான விலை நிர்ணய கட்டமைப்பை விவா தித்து அமைப்பதற்கு அனைத்து தொடர் புடைய சங்கங்களையும் ஒன்றிணைக்க  வேண்டும் என்றார்.