districts

img

கோயில்வழி பேருந்து நிலையம் கட்டும் பணி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பூர், ஜன.22- திருப்பூர் மாநகராட்சியில் ரூ.34.86 கோடி மதிப்பீட்டில் கோவில்வழி பேருந்து நிலையம் கட்டும் பணியை  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் செவ்வாயன்று ஆய்வு  மேற்கொண்டார். அத்துடன் திருப்பூர், பொங்கலூர் ஊராட்சி  ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும்  ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாநகராட்சி, கோவில்வழியில் புதிய பேருந்து  நிலையம் 4.85 ஏக்கர் பரப்பளவில் தரை தளம் 3,880 ச.மீ,  முதல் தளம் 2,745 ச.மீ,  இரண்டாவது தளம் 1,200 ச.மீ என  மொத்தம் 7,825 சதுர மீட்டர் பரப்பளவில் 42 பேருந்துகள்  நிறுத்துமிடம், 35 கடைகள், 550 இருசக்கர வாகனம் நிறுத்துமி டம், உணவகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை,  வணிக வளா கம், பயணச்சீட்டு மையம், காத்திருப்புக் கூடம், பதிவு அலு வலகம், அவசர சிகிச்சை மையம், நிர்வாக அலுவலகம், ஏடிஎம் மையம், தகவல் மையம், ஓட்டுனர் ஓய்வு அறை, குடிநீர்  வசதி, கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம்,  உள் மற்றும் வெளி நுழைவாயில், ஒலிபரப்பு அறை, சிசி டிவி கண்காணிப்பு அறை, காவல்துறை பாதுகாப்பு அறை,  தானியங்கி படிகட்டுகள், தொழிலாளர் அறை, தங்கும் அறை,  மின்சார வசதி, சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் வசதி, தீ  தடுப்பு வசதி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.  இந்த பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து பணிகளை  விரைந்து முடிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு ஆட்சியர்  கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.  பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், உகாயனூர் ஊராட்சி,  பொல்லிகாளிபாளையத்தில் 3.25 ஏக்கர் பூமிதான நிலங் களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக,  அவர் பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில்  திருப்பூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது, திருப்பூர் மாநக ராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி, உதவி ஆணையர்  வினோத், மாநகராட்சி தலைமை பொறியாளர் (பொ) செல்வ நாயகம், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மயில்சாமி மற்றும்  துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.