districts

img

காவல் நிலையம் முன் வாலிபர் தீக்குளிப்பு ஆர்.டி.ஓ. விசாரணை கோரி வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை,ஜன. 22- காவல் நிலையம் முன் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கோட்டாட்சியர் விசா ரணைக்கு உட்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வட சென்னை மாவட்டம் சார்பில் எச். 6 காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் எல்.பி.சரவணத்தமிழன் கூறுகை யில், வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் கொருக்குப்பேட்டை எச் 6 காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க வந்த ராஜன் (30) என்பவர், அந்த காவல் நிலைய வாசலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தில் உண்மை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. இந்த தற்கொலையை சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவல்துறையினரே விசாரித்து வருகின்றனர். இதனால் முழுமையான உண்மை வெளிவர வாய்ப்பில்லை. எனவே காவல்துறை அல்லாத ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி, முழுமையான உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். நியாயம் கேட்டு போராடுவதற்கு கூட அனு மதி மறுத்து காவல்துறை யினர் வாக்குவாதத்தில் ஈடுபடும் போக்கு சரியான தல்ல என்று அவர் கூறி னார். இதில் மாவட்டப் பொரு ளாளர் விஜய், நிர்வாகிகள் புவியரசி, சுரேஷ், ஆர்.கே.நகர் பகுதி தலைவர் கோபி, செயலாளர் நா.விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.