கடலூர், ஜன,22- அரசுப் போக்குவரத்து கழக ஊழி யர்கள் சங்கம் வேலூர் மண்டலம் சார்பில் போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். தனியார்மயம், ஒப்பந்தம் நியமனத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் புதன் கிழமை சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மண்டலத் தலைவர் கே.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். பரசு ராமன் முன்னிலை வகித்தார். மண்டல செய லாளர் கே.இளங்கோ, நீலகண்டன் (ஓய்வு பெற்றோர்) உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதே போல், திருவண்ணாமலையில் போக்கு வரத்து ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். காஞ்சிபுரம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளம் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் தலைமை யில் மறியல் நடைபெற்றது. காஞ்சி புரம் மண்டலத் நிர்வாகிகள் எஸ்.மாயக்கண்ணன், பி.சீனிவாசன், ஜி.கமலக்கண்ணன், என்.நந்தகோபால் (ஓய்வு), வி.இமயவரம்பன் (ஓய்வு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனை வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கடலூரில் போலீசாருடன் வாக்குவாதம் கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் சிறப்பு தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கி னார். தலைவர் மணிகண்டன், பொதுச் செய லாளர் முருகன், துணை பொது செய லாளர்கள் கண்ணன், ராமமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதில் பொருளாளர் அரும் பாலன், நிர்வாகிகள் நடராஜன், ராஜ், விரைவு போக்குவரத்து மத்திய சங்கத்தின் துணைத் தலைவர் சிவகுமார், பொருளாளர் கணேசன், பணிமனை செயலாளர் ஞானசக்தி, பொருளாளர் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜவான் பவன் சாலைக்கு ஊர்வலமாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, இம்பீரியல் சாலையிலும், சிலர் உழவர் சந்தை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறை யினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்க ளில் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.