சேலம், ஜன.22- சேலம், சாமிநாதபுரம் பகுதியில் செயல்படும் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், புதிய மின் இணைப்பு பணிகளுக்கு அதி கப்படியாக லஞ்சம் பெறுவதாக, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தட்டி வைக்கப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற் பட்டது. சேலம் மாநகரம், சாமிநாதபுரம் பகு தியில் செயல்படும் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலு வலகத்தில், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மின் இணைப்பு வழங்க பல்வேறு வகைகளில் கையூட்டு பெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. குறிப்பாக, வீடுக ளுக்கு புதிய இணைப்பு கட்டணம் பெற ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையும், தற்காலிக இணைப்பிற்கு ரூ.3 ஆயிரம், மீட்டர் இடமாற்றத்திற்கு ரூ.2 ஆயிரம், வணிக இணைப்பிற்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், கையூட்டு பெறுவதாக தொடர்ந்து பொதுமக்களும், வணிகர்களும் குற் றஞ்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட போது, உரிய விளக்கம் தராததைக் கண்டித்து லஞ்சப் பட்டியல் குறித்த பேனர், மின்வாரிய அலுவலகத்தில் நுழைவாயில் முன்பு வைக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் மின்துறை அதிகாரிகள் ஈடுபட்டால், முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் எச்சரித்த னர்.