districts

img

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

தாராபுரம், நவ. 11 - கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தாராபுரத்தில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. தாராபுரம், திருமலை பாளையம் கிராமத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் அகல்விளக்கு மற்றும் மண்பாண்டங்கள்  உற்பத்தி செய்யும் பணி யில் கடந்த சில  ஆண்டுக களுக்கு முன்பு வரை நடைபெற்று வந்தது. தற்சமயம் அந்த குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் வேறு வேலைக் குச் சென்றுவிட்டனர். இந்நிலையில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த வர்கள் மட்டும் தற்போது இத்தொழிலை செய்து வருகின்றனர். இதுகுறித்து இத்தொழிலில் ஈடுபட்டு வரும் சங்கிலிமுத்து என்பவர் கூறியதாவது, விலைக்கு மண்ணை வாங்கி அகல் விளக்கு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மிசின் விளக்கு வந்தபோதிலும் கையால் செய்யும் அகல்விளக்குக்கு இந்த ஆண்டு பெரும் வரவேற்பு உள்ளது. ஆயிரம் சுட்டி அகல்விளக்குகள் ரு.600 க்கு கொள் முதல் செய்வதாக மகிழ்ச்சி தெரிவித்தார். அதேநேரம் தமிழக அரசு இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மண் அள்ள பர்மிட் அளித்தால் தொடர்ந்து இத்தொழிலை செய்ய இயலும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.