districts

img

தரக்குறைவாக பேசிய கல்லூரி முதல்வர்

உதகை, ஜன.22- உதகை அரசு கல்லூரி பேராசிரியர்கள்,  ஊழியர்களை தரக்குறைவாக பேசிய கல் லூரி முதல்வரை பணியிட மாற்றம் செய்யக்  கோரி பேராசிரியர்கள் கல்லூரி வளாகத் தில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அரசு கலைக்கல்லூரி 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள,  கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியா ளர்களை கல்லூரி முதல்வர் ராமலட்சுமி அவ தூறாகவும், தரக்குறைவாகவும் பேசுவதாக குற்றம் சாட்டி புதனன்று கல்லூரி வளாகத் தில் பேராசிரியர்கள் கண்டன போராட்டத் தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட  பேராசிரியர்கள் கலந்து கொண்டு முழக்கங் களை எழுப்பினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள் கூறியதா வது, இந்த முதல்வர் கல் லூரியில் சேர்ந்தது முதல்  பேராசிரியர்கள் பணியா ளர்கள் ஆகியோரை அவ தூறாக பேசி வருகிறார். சமீபத்தில் அலுவலக உத வியாளர் மற்றும் பெண்  ஊழியரை மிகவும் தரக் குறைவாக பேசி உள்ளார்.  இதனால் அவர்கள் கடும்  மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே  கல்லூரி முதல்வரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும், என்றனர். இதுகுறித்து முதல்வர் ராமலட்சுமி கூறு கையில், கல்லூரி நிர்வாகம் சரியாக இயங்கு வதற்காக அனைவரிடமும் பணிகளை துரிதப் படுத்துகிறேன். யாரையும் அவதூறாக தகாத  வார்த்தைகளால் இதுவரை நான் பேசியது கிடையாது என்றார். இந்நிலையில் கல்லூரி யில் முன்னாள் மாணவர்கள் நல நிதி, பெற் றோர் ஆசிரியர் கழகம், பட்டமளிப்பு விழா,  விளையாட்டு விழா மற்றும் கேண்டில் நடத் திய விவகாரங்களில் நிதி முறைகேடு நடந் துள்ளதாக கல்லூரி முதல்வர் மீது குற்றம்  சாட்டு எழுந்ததின் பேரில் கடந்த வாரம்  கோவை மண்டல கல்லூரி கல்வி இணை  இயக்குனர் தலைமையில் முதல்வரிடம்  விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக் கது.