திருப்பூர், பிப்.24 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அவிநாசி கிளையின் சார்பில் தேநீர் இலக்கிய சந்திப்பு ஞாயி றன்று மாலை நடைபெற்றது. 10 பேர் பங்கேற்ற இந்த சந்திப்பில், திரைப்படம் குறித்து வாசித்த புத்தகம் பற்றி திருப்பூர் புத்தகத் திருவிழா அனு பவம் என அவரவர் அனுபவங்களை பலரும் பகிர்ந்து கொண்டனர். இந்த உரையாடலில், பங்கேற்ற ஒருவர், சில வருடங்களுக்கு முன்பு தமுஎகச சார்பில் மேற்கொண்டி ருந்த “வரலாறு அறிவோம்” என்கிற பெயரில் மதுரையை யும் சுற்றியுள்ள பகுதிக்கும் சென்ற பயணத்தை நினைவு கூர்ந்து உரையாற்றினார். அந்த வரலாற்றுப் பயணத்தின் போது திருப்பரங்குன்று மலையடிவாரத்தில் அமர்ந்து மத நல்லிணக்கம் குறித்து வெண்புறா சரவணன் பேச்சைக் கேட்டு, இத்தனை படித்து வளர்ந்த காலத்தில் இனி மதக் கலவரத்திற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என எண்ணியதாகவும், ஆனால் இப்போ தும் கலவர வாய்ப்பினை ஏற்படுத்த சிலர் காத்திருப்பது ஆச்ச ரியமாக இருக்கிறது என்று தெரிவித்தார். நேரில் கண்டு அறிந்ததால் கலவரக்காரர்களின் பொய் களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது, நல்ல தெளிவினைத் தந்தது என்று கூறினார்.