மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விடுதலை முன்னணியினர் திங்க ளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் மோகன்ஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.