ஈரோடு, டிச.30- பட்டியல் சாதியை சேர்ந்த நபரை, கடன் வசூ லிக்க அடைத்து வைத்து சித்தரவதை செய்து பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவரை சந் தித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யினர் ஆறுதல் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம், சிவியாம்பாளையம் அருகே திட்டுப்பாறையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கு, மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக் கின்றனர். சுற்றுலா வாகனம் வைத்து தொழில் செய்து வந்த ஆகாஷ், தற்போது அப்பகுதியில் ஒரு பனியன் நிறுவனத்தில் ஓட்டுநராகியுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பூபேஸ் என்பவரிடம் அவிநாசியைச் சேர்ந்த கலை (எ) ராம்பாபு கார் அடமானக் கடனாக ரூ.1.50 லட்சம் கடன் பெற உத வியுள்ளார். இதுபோல கடன் பெற்றுக் கொடுத் தால் அதற்கு ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கமிசன் கிடைக்கும். இந்நிலையில் காரை வைத்து கடன் பெற்ற ராம்பாபு அடுத்த சில நாட்களில் காரையும் வாங்கிக் கொண்டு ஊரை விட்டுச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆகாசும் மது ரைக்கு வேலைக்குச் சென்று விட்டார். இந்நிலை யில் கடந்த சனியன்று மனைவி குழந்தையுடன் விஜயமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த தைப் பார்த்த பூபேசின் நண்பர்கள் அவருக்குத் தக வல் தெரிவித்தனர். அடுத்த சில மணி நேரங்க ளில் அங்கிருந்து கார் மூலம் ரியல் எஸ்டேட் வீட்டு மனைகள் அமைக்கப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மகா என்ற தனியார் பள் ளிக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். மறுநாள் காலை ஒரு தோட்டத்து வீட்டிற்கு அழைத்துச் சென்று குடோனில் வைத்து கம்பி, வேப்பங்குச்சி, தென் னம்பட்டை உள்ளிட்டவற்றால் கடுமையாகத் தாக் கினர். இதில் ஆகாசிற்கு கை, கால், தொடை உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆத்திரம் தீர அடித்த கும் பல் குடோனில் விட்டுச் சென்ற பிறகு அங்கே கிடந்த சுத்தியால் சிமெண்ட் அட்டையால் வேயப் பட்ட கூரையை உடைத்து அங்கிருந்து தப்பினார் ஆகாஷ். அதன் பிறகு தந்தை பெரியார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் பி.பி. பழனிசாமி, ஓ.முருகன், என்.பாலசுப்பிரமணி, சண்முகவடிவேல், ஆர்.முருகேசன் உள்ளிட் டோர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி னர்.