districts

img

முறையாக பாடம் எடுக்காத கணினி ஆசிரியர் ஆட்சியரிடம் மாணவர்கள் மனு

கோவை, பிப்.24- ஒண்டிப்புதூர் ஆண் கள் அரசு பள்ளியில் முறை யாக பாடம் எடுக்காத  கணினி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் பகுதியில்  செயல்பட்டு வரும் ஆண் கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், கணினி ஆசிரியராக பணியாற்றி  வருபவர், முறையாக பாடம் எடுப்பதில்லை மற்றும் செய்முறை பயிற்சிக்காக கணினி ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்வதில்லை எனக்கூறி அப்பள்ளியில் படித்து வரும் மாணவர்கள், இந்திய மாணவர் சங்கம் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று புகார் மனு அளித்தனர். மேலும், இது குறித்து மாணவர்கள் கூறும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள் பள்ளியில் பணியாற்றி வரும்  கணினி ஆசிரியர் முறையாக வகுப்பு எடுப்ப தில்லை. அதே போல் கணினி ஆய்வகத் திற்கும் அழைத்துச் செல்வதில்லை. இது குறித்து நாங்கள் பள்ளி முதல்வரிடம் தெரி வித்தோம், எந்த நடவடிக்கையும் இல்லை.  இதன் காரணமாக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளோம். அப்போது விசாரணைக்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி முதல்வரி டம் மட்டும் விசாரணை செய்துவிட்டு, இது பொய்யான புகார் என தெரிவித்துள்ளனர். அதன் காரணமாகவே தற்போது மாவட்ட ஆட்சியரை சந்தித்துள்ளோம். உயர் கல்விக்கு செல்ல உள்ள எங்களுக்கு முறை யாக பாடம் எடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். முன்ன தாக நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.அக மது ஜூல்ஃபிகர், பள்ளி மாணவர்கள் திரளாக  கலந்து கொண்டனர்.