சேலம், டிச.30- இந்திய மாணவர் சங்கத்தின் 55 ஆம் ஆண்டு அமைப்பு தினம் திங்களன்று கொடியேற்றி கொண்டாடப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் 55 ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டக்குழு சார்பில் கொடி யேற்று விழா மற்றும் கருத்தரங்கம் திங்களன்று நடைபெற்றது. சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு, மாணவர் சங்க மாவட் டத் தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ். பவித்ரன் சங்கத்தின் வெண்கொடியை ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து, இந்திய மாணவர் சங்க வரலாறு, மாண வர் பேரவை தேர்தல், கல்வி நிலையங் களில் மாணவிகள் பாதுகாப்புக்குழு அமைத்தல் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் கருத்தரங்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிகளில் மாணவர் சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் கோகுல், கீர்த்தி வாசன், துணைச்செயலாளர்கள் அபி ராமி, டார்வின், நிர்வாகிகள் பெரிய சாமி, நவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நீலகிரி இதேபோன்று மாணவர் சங்கத்தின் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகா சிறப்புப் பேரவை திங்களன்று நடைபெற் றது. தாலுகா செயலாளர் சுகந்தன் வெண்கொடியை ஏற்றி வைத்து, கூட் டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் யோகராஜ் துவக்கவுரை யாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் மணிகண்டன், வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநில செயற் குழு உறுப்பினர் பிரவீன் சிறப்புரை யாற்றினார். கோவை இதேபோன்று இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு சார் பில் நடைபெற்ற அமைப்பு தின கொடி யேற்று விழாவில், மாவட்டத் தலைவர் ஜி.அகமது ஜூல்ஃபிகர், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆசாத், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கு.பாவேல், ஜெகதீஷ், கி.ரங்கசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.