districts

img

தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலை, ஜன.22- மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் தடை  செய்யப்பட்ட மருந்துகளை விவசாயிக ளுக்கு விற்பனை செய்யும் தனியார் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் தலைமையில் புதனன்று அரசு கலைக்  கல்லூரி வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதணன் பேசுகை யில், மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் என  அரசு தடை செய்த மருந்துகளை லாப நோக் கில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும்  தனியார் மருந்து கடைகள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந் துகள் குறித்தும், தடை செய்யப்பட்ட மருந்து கள் குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் சுமார் 60 சதவீதம் தென்னை விவ சாயம் செய்யப்படுகிறது. தற்பொழுது தேங்காய்க்கு உரிய விலை கிடைத்தாலும், தேவையான விளைச்சல் இல்லை. எனவே நோய் தாக்குதலை தடுக்க மானிய விலை யில் உரம் மற்றும் மருந்துகளை வழங்க  வேண்டும். உடுமலை மற்றும் கணியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியான ஆவணங்களை வைத்து பதிவு செய்த  பத்திரங்களை ரத்து செய்து, பாதிக்கபட்ட வர்களுக்கு நிலங்களை தர வேண்டும். ஜம் புக்கல் மலை ஆக்கிரமிப்பு குறித்து விரிவான  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பல  ஆண்டுகள் எஸ்.எப் 7 மற்றும் எஸ்.எப் 8 ல்  குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறினார்.  பட்டுக்கூடு விவசாயிகள் சங்க செல்வ ராஜ் பேசுகையில், உடுமலை பகுதியில் விவ சாய நிலங்களில் இருக்கும் மின் கம்பிகள், மோட்டார் மற்றும் கால்நடைகள் திருட்டை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் திருட்டு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித் தால் நடவடிக்கை எடுக்கப்பது இல்லை. மேலும் பிஏபி கால்வாய் கரை மற்றும் கால் வாய் உள்ளே ஊராட்சியின் மொத்த குப்பைக ளும் கொட்டப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை சார்பில் கால்வாய் கரைகளில் கம்பி வேலி அமைக்க  வேண்டும். குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பா ளையம் ஊராட்சி அடிவள்ளி கிராம் முழுவ தும் வருவாய்த்துறை பதிவில் நீர் நிலை யாக தவறாக பதியப்பட்டு உள்ளது. இதை  நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து பேசிய விவசாயிகள், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்.  பிஏபி கால்வாய்களில் தண்ணீர் திருட்டை தடுக்க கண்காணிப்புக்குழு தீவிர ரோந்து செல்ல வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.