திருப்பூர், பிப். 24 - வெள்ளகோவில் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனத்தால் சுற்று வட்டார மக்கள் சுவாசப் பிரச்சனை, புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்குத லுக்கு உள்ளாவதாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், வெள்ள கோயில் நடுப்பாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, இப்ப குதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்து வருகிறோம். இப்பகுதி கீழ்பவானி பாசன வசதி பெறும் பகுதியாகும். இப்பகுதியில் பாலுமணி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் ஆலை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அரசின் விதிகளை மீறி செயல்பட்டு வரு கிறது. ஆலை தொடங்கப்பட்ட காலத்திலி ருந்தே கொடிய நச்சு வாயுக்களை வெளி யேற்றி வருகின்றனர். இதன் காரணமாக இப் பகுதியில் காற்றின் தரம் மிகவும் மாசுபட்டு, சுவாசிப்பதற்கு முடிவதில்லை. இதுகுறித்து ஆலை உரிமையாளரிடம் பலமுறை கூறியும், எந்த தீர்வும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் சுவாச பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கால்வாயில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவு மேலும் இந்த ஆலை கீழ்பவானி கால்வா யின் அருகாமையில் அமைந்துள்ளதால், ஆலைக்கு பயன்படாத ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இரவு நேரங்களில் கால் வாய் நீரில் கொட்டப்படுகிறது. இதனால் தண் ணீர் மாசு ஏற்பட்டு குடிநீர் மூலம் மனிதர்க ளுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இந்த ஆலைக்கு மூலப்பொருள் மற்றும் உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் கால்வாய் கரையின் மேலாக ஓட்டிச் செல்லப்படுகிறது. ஆதலால் கரை சிதலமடைந்து கால்வாய் உடைப்பு ஏற்படுகி றது. மழை காலங்களில் உடைப்பு ஏற்பட் டால் பெரும் பாதிப்பு ஏற்படும். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ள போதும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்பட அரசுத் துறைகள் எப்படி இந்த ஆலைக்கு அனுமதி கொடுத்தார்கள் என்பது வியப்பாக உள்ளது. எனவே மக்கள் நல னுக்கு விரோதமாக இயங்கும் இந்த ஆலையை மூட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புக்கு வீட்டு வரி திருப்பூர் மாவட்டம், 5 ஆவது வார்டுக்கு உட்பட்ட வாவிபாளையம், திருக்குமரன் நகர் அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, மத்திய, மாநில அர சின் மானியத்தில் ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக அடுக்குமாடி குடி யிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டது. இந்நிலை யில், இங்குள்ள 1248 குடியிருப்புகளில் வசிப் பவர்களுக்கு வீட்டு வரி சம்பந்தமாக எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், குடியிருப்பு பராமரிப்பு தொகை என்ற பெயரில் மாதம் ரூ.250 வசூலிக்கப்பட் டது. அதை வீட்டு வரி கட்டணம் என்று எண்ணி இருந்தோம். கடந்த ஜனவரி மாதத்தில் அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் அனைத்து குடி யிருப்புகளுக்கும் கடந்த மூன்று ஆண்டுக ளுக்கும் சேர்த்து வீட்டுவரி வசூலிக்கப்பட உள்ளதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் பராமரிப்பு குறை வாக இருப்பதால், வீட்டுவரியை பாதியாக குறைத்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது. பேரூந்தை மீண்டும் இயக்க கோரிக்கை: காமாட்சி நகர், ராசாக்கோயில், பாலாஜி நகர், உமையன் செட்டிபாளையம், தேவரா யன்பாளையம், மங்கலம் சாலை பைபாஸ், காசிகவுண்டன் புதூர் ஆகிய ஊர்களுக்கு சென்று வந்த 11 பி 29 என்ற வழித்தடப் பேருந்து திருப்பூரில் இருந்து காலை 10.30 மணிக்கும், அவிநாசியில் இருந்து 11.30 மணிக்கும், மதியம் திருப்பூரில் இருந்து 2.15 மணிக்கும், இரவு திருப்பூரில் இருந்து 8.40 மணிக்கும், அவிநாசியில் இருந்து 9.40 மணிக்கும் என சென்று வந்தது. அதே போல் தனியார் பேருந்து எஸ்.எம்.டி அவிநாசியில் இருந்து காலை 7.30 மணிக்கும், திருப்பூரில் இருந்து 8.15 மணிக்கு வந்து சென்றது. இந்த இரண்டு பேருந்துகளும் இந்த வழிப்பாதையில் இயக்கப்படுவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிர மத்திற்கு உள்ளாகின்றனர். எனவே நிறுத்தப் பட்ட இந்த பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவிநாசி தாலுகா ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மனு அளித் தார். மாவட்ட வருவாய் அலுவலர் க. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.