districts

கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை

சேலம், செப்.16- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரி யும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 5 மாத சம்பள நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 113 அரசு கலை மற்றும் அறிவியல் கல்வியல் கல்லூரிகளில் இரண்டு முறைகளில் சுமார் 4 ஆயி ரத்து 436 கௌரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்ற னர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங் காமல் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, கௌரவ விரிவுரையா ளர்களின் 5 மாத ஊதியத்தை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜங்சன் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் மனு அளித்தனர்.