tamilnadu

நிலுவைத் தொகை வழங்கக் கோரி உள்ளாட்சி ஊழியர் போராட முடிவு

திருவாரூர்:
திருவாரூரில், உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க(சிஐடியு) ஒன்றிய அளவிலான கூட்டம் பி.பன்னீர் செல்வம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணியன் ரையாற்றினார். மாவட்டத்தலைவர் கே.கோவிந்தராஜ், செயலாளர் கே.முனியாண்டி, தூய்மை காவலர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், சங்க ஒன்றிய செயலாளர் வி.பி.ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

2000-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தமேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு 4,600 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். அதற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு 3200 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். முன்தேதியிட்டு நிலுவைத் தொகையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 7-ல் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடும்பத்துடன் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.