tamilnadu

img

வருடாந்திர போனஸ் கேட்டு விமான தொழிலாளர் போராட முடிவு

திருச்சிராப்பள்ளி, ஜூன்,15- திருச்சி மாவட்ட விமான நிலைய ஒப்பந்த தொழிலாளர் சங்க 4ம் ஆண்டு பேரவை கூட்டம் வெள்ளியன்று பொன்மலை சங்கத்திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மாறன் துவக்கவுரையாற்றினார். சிபிஎம் பொன்மலை இடைக்கமிட்டி செயலாளர் கார்த்திகேயன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொன்மலை பகுதி தலைவர் விஜயேந்திரன், டிஆர்இயு பொன்மலை கோட்ட உதவி செயலாளர்  மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில், வருடாந்திர போனஸ் கேட்டு ஜூலை மாதம் போராட்டத்திற்கு திட்டமிடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தலைவராக மெ.கணேசன், செயலாளராக து.குமார், துணைத்தலைவர் ம.கார்த்திக்பிரசன்னா, துணைசெயலாளர் உ.சண்முகம், பொருளாளர் ம.விஜயவேல் உள்பட 12 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் ஜாவித் நன்றி கூறினார்.