திருப்பூர், ஜன.21 - 21 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழா குறித்து மக்களுக்கு விளம்ப ரப்படுத்தும் வகையில் செவ்வாயன்று திருப்பூரில் மினி மாரத்தான் மற்றும் பெருந்திரள் வாசிப்பு இயக்கம் நடை பெற்றது. தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பில் 21 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழா திருப்பூர் காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) துவங்கி பிப். 2 ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு நடை பெற உள்ளது. இதுகுறித்து மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செவ்வாயன்று காதர் பேட்டை அருகே உள்ள ஜெய்வாபாய் நகரவை மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு மினி மாரத் தான் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய மினி மாரத்தான் ரயில் நிலையம், குமரன் நினைவகம், காதர் பேட்டை, ராயபுரம் வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து பள்ளி மாண வியர்களின் “பெருந்திரள் வாசிப்பு இயக்கம்” நடைபெற்றது. இதில் பள்ளி களில் சாதிய பிரிவினைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எழுதப்பட்ட கயிறு என்னும் புத்தகம் வாசிக்கப்பட்டது. மேலும், 250க்கும் மேற்பட்ட மாணவி கள் தங்கள் உறவினர்களை புத்தகத் திருவிழாவிற்கு அழைக்கும் வகையில் கடிதம் எழுதி தபால் அனுப்பினர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகு மார், பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகி ஆர்.ஈஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, ஆசிரியர்கள், மாணவிகள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். அதேபோல திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பெருந் திரள் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.