திருப்பூர், ஜன.21 - ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய அளவி லான தடை தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று திருப்பூர் வருகை தந்த மாநகராட்சிப் பள்ளி மாணவி வர்ஷிகா வுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மங்கலம் சாலை பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், மணிமஞ்சுளா தம்பதியர். இவர் களது மகள் வர்ஷிகா ஜெய்வாபாய் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தடகளத்தில் ஆர்வம் மிகுந்த வர்ஷிகா பள்ளி மூலம் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் ஜன.7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய அள விலான தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண் டார். இதில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இவர் 80 மீட்டர் தூரத்தை 12.20 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் 400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியிலும் பங்கு பெறுவதற்கு தேர்வாகி உள்ளார். இந்நி லையில் செவ்வாயன்று திருப்பூர் திரும்பிய வர்ஷிகாவிற்கு ஜெய்வாபாய் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சக மாண விகள் திரளானோர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.