districts

img

அவிநாசியில் சாலைப் பணியாளர் கையெழுத்து இயக்கம்

அவிநாசி, ஜன.21 - மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியி டப்பட்ட அரசாணை 140ஐ திரும்பப் பெற வலியுறுத்தி செவ்வா யன்று அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு நெடுஞ்சா லைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் கையெ ழுத்து இயக்கம் நடத்தினர். கோட்டத் தலைவர் கருப்பன் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வை தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் ராணி கையெழுத்திட்டு துவக்கி  வைத்தார். இதில், மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், கோட்டச் செயலாளர் ராமன், கோட்டத் தலைவர் அண்ணா துரை, சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, வட்டக் கிளைத்தலைவர் சின்னராசு, ஓய்வூதிய சங்க வட்டக்  கிளை தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.