நாமக்கல், ஜன.21- வெண்ணந்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு மயான வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் ஊராட்சிக்குட்பட்ட தொட்டியம்பட்டி பகுதியில் பட்டியலின மக் கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். முறையான மயான வசதி இல்லாத நிலை யில், இப்பகுதி மக்கள் கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆத்திமேடு திருமணிமுத்தாற்றில் இறந்தவர்களின் சட லங்களை நீருக்கு அடியிலும், சேறும், சகதி யிலும் அடக்கம் செய்து வருகின்றனர். இதில் அப்பகுதியில் வசிக்கும் போயர் சமூக மக் கள் உடல்களை புதைக்கும் வழக்கத்தை மட் டுமே கொண்டவர்கள் என்பதால், வேறு வழி யின்றி சிரமப்பட்டு வருகின்றனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு வருவாய்த் துறையினர், அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி மயானத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், தனிநபர் ஒருவர் வழக்கு போட்டதை காரணம் காட்டி மயா னத்தை பயன்படுத்த மக்கள் கோரிக்கை வைத்த போதெல்லாம் வழக்கை காரணம் காட்டி வருவாய்த் துறையினர் மக்களை அலைக்கழித்து வந்தனர். 2022 ஆம் ஆண்டு வழக்கு முடிவடைந்த நிலையில், தற்போது போயர் தெருவில் கவலைக்கிடமாக உள்ள மூதாட்டி ஒருவர் இறக்கும் தருவா யில் உள்ளதால், அவரை அடக்கம் செய்திட மயான வசதி ஏற்படுத்தித்தர வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தொட்டியம்பட்டி ஊராட்சி யில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ள போதிலும், வருவாய் துறையினர் ஒரு இடத்தை தேர்வு செய்து வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் திருமணி முத்தாற்றிலேயே அடக்கம் செய்ய சொல் வதை கண்டித்தும் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கிளைச் செயலாளர் ஆர்.நடேசன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட் டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.ரங்கசாமி, ஒன்றி யச் செயலாளர் பி.பெரியசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கோ.செல்வராசு, பி. ராணி, சிவராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் நாகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.