கோவை, ஜன.11- ஓய்வூதியர்களுக்கு பாரபட்சமின்றி கருணைத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, வெள்ளியன்று அகில இந்திய பென் சனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பென்சன் உயர்வு வழங்கிட வேண்டும், பொது காப் பீட்டு துறையில் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவிகி தம் உடனே உயர்த்திட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவும், அனைத்து ஓய்வூதியர்க ளுக்கும் பாரபட்சமின்றி கருணைத் தொகையை வழங் கிட வேண்டும். அனைவருக்குமான பென்சன் திட் டத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவைப் பகுதி எல்ஐசி அலுவலக வளாகம் முன்பு பென்சனர்கள் சங்கத்தின் தலைவர் பி.வி.கல்யாண சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தென் மண்டல இன் சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் இணைச் செயலாளர் வி.சுரேஷ், கோவைப் பகுதி எல்ஐசி பென்சனர் சங்க செயலாளர் பி.வாசுதே வன், பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க அமைப்பு செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இப் போரட்டத்தில் கோவைப் பகுதி இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஊழியர் சங்க செய லாளர் துளசீதரன், தலைவர் பி.வி.குமார் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.