திருப்பூர், ஜன. 11 - திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறி ஞர்கள் இரு தினங்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் பார் அசோசியேசன், திருப்பூர் அட்வகேட்ஸ் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் சார்பில் 2025 பொங்கல் விழா ஜனவரி 9, 10 தேதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்களுக்கு கலந்து கொண்டனர். இவர்களுக்கு கோலப் போட்டி, லக்கி கார்னர் போட்டிள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங் கப்பட்டன. பொங்கல் வைத்து மேள தாளத்துடன் விழா நடை பெற்றது. இவ்விழாவில் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் நீதிபதி கள் பங்கு கொண்டும், வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகி கள் கே.என். சுப்பிரமணியம், ஈ.பூபேஸ், எஸ்.ஏ.சுப்புராஜ், எஸ்.பத்மநாபன், ஆ.அமர்நாத், குமரன் , லதா மகேஸ்வரி, என்.பூங்கொடி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.