திருப்பூர், பிப். 24 – ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்க ளில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லினின் அறிவிப்பைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நூற்றுக்கணக் கானோர் வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளிக்க வந்தனர். கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்ற தமி ழக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தல் ஆட்சேப னையற்ற புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்கள் 86 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா ஆறு மாத காலத்தில் வழங்கப்படும் என்று அறிவித் தார். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் மக்களுக்கும், பல் வேறு நகரங்களில் மற்றும் கிராமப்புறங்களில் நீண்ட காலமாக பட்டா கோரி வரும் ஏழை, எளிய மக்களுக்கும் பயனளிக்கும் என்று மார்க் சிஸ்ட் கட்சி உள்ளிட்டோர் வரவேற்புத் தெரிவித் துள்ளனர். குறிப்பாக திருப்பூர் மாநகரம் பின்னலாடைத் தொழில் வளர்ச்சி காரணமாக வேகமாக விரிவ டைந்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலும் வீடில்லாத ஏழை, எளிய மக்கள் வீட்டும னைப் பட்டா கோரி ஆண்டுக்கணக்காக மனுக் கொடுத்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சிய ரகத்தில் திங்களன்று நடைபெற்ற வாராந்திர மக் கள் குறைதீர்க் கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா கோரி தனிப்பட்ட முறையிலும், பல்வேறு குடியி ருப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாகவும் கோரிக்கை மனுவுடன் ஆட்சியரகத்தில் குவிந்த னர். குறிப்பாக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதி களில் குடியிருப்போர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த ஏழை, எளிய மக்கள் ஆட்சியரகத்திற்கு வந்து பட்டா கோரி விண்ணப் பித்தனர். இவர்களில் பலர் ஏற்கெனவே ஆண்டுக்க ணக்கில் வீட்டுமனைப் பட்டா கோரி மனுக் கொடுத் திருப்பதாகவும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. தற்போது முதல்வர் அறி வித்திருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தகுதி வாய்ந்தவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடனும், நம்பிக் கையுடனும் வந்திருப்பதாகக் கூறினர்.