திருப்பூர், நவ.22- லைப் இன்சூரன்ஸ் என்ற பெயரில் ரூ.85 ஆயிரம் இணையவழி பண மோசடி செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பூபதி (46) என்பவர் வெள்ளியன்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் பூலுவ பட்டி தோட்டத்துப்பாளையம் மகா விஷ்ணு நகரில் வசித்து வருகிறேன். கட்டிட கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை விநியோகிக்கும் தொழில் செய்து வருகிறேன். திருப்பூர் பெருமாநல்லூர் சாலை புதிய பேருந்து நிலையம் பகுதியில் பரோடா வங்கியில் கணக்கு வைத்திருந்தேன். வங்கிக் கணக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி யுபிஐ பேமெண்ட் பியூச்சர் ஜெனரல் லைப் இன்சூரன்ஸ் என்ற பெயரில் ரூ.85 ஆயிரம் என்னு டைய வங்கிக் கணக்கிலிருந்து பரிவர்த் தனை செய்யப்பட்டிருந்தது. நான் அந்த நிறுவனத்தில் எவ்விதமான காப்பீடும் செய்யவில்லை. இது தொடர்பாக யாரும் என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை. ஆனால் என்னுடைய அனும தியின்றி வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதை கடந்த நவ.16 ஆம் தேதி தேதி அறிந் தேன். இது தொடர்பாக கோவையில் உள்ள காப்பீடு நிறுவனத்திற்கு சென்று விசாரிக்க சென்றபோது, அது மூடியி ருந்தது. திருச்சியில் மட்டும் அலுவலகம் செயல்படுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் திருப்பூரில் உள்ள வங்கிக் கிளைக்கு சென்று விசாரித்த போது, இந்த பணம் யாருக்கு சென்றது என்பதை கண்டறிய முடியவில்லை என தெரிவித்து விட்டனர். மேலும், இந்தப் பண பரிவர்த்தனை இணைய வழி பண மோசடியாக இருக்கலாம், உட னடியாக காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்ட மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்ப துடன், எனது பணம் திரும்ப கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூபதி கோரியுள்ளார்.