சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள பள்ளிவாசல் அருகே, வார்டு 4, 5, 6, 7க்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் கலந்துகொண்டு, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
