districts

img

சங்கரய்யா நகர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதரக் கோரிக்கை

திருவண்ணாமலை, நவ. 22- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் ஆதிதிராவிடர் (மற்றும் ) பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தொல்குடியினர் தின சிறப்பு முகாம் - 2025 நவம்பர் 18 முதல் 23 வரைநடைபெற்று வருகிறது. இந்த முகாமில் சங்கரய்யா நகர் பழங்குடி மக்களுக்கு சாதி சான்று, ஆதார் அட்டை,நலவாரிய அட்டை, தாட்கோ கடனுதவி, இலவச வீட்டு மனை பட்டா, ஆகியவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களோடு 25 க்கும்மேற்பட்ட பழங்குடி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வெள்ளியன்று (நவ.21)மனு அளித்தனர்.  இந்த நிகழ்வில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி  ப. ரவி, சிபிஎம் தாலுகா செயலாளர் இரா. இரவிதாசன், போளூர் நகர செயலாளர்  ப.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க போளூர் வட்டச் செயலாளர்  அ.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.