திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ள ஜோதி பூ மார்க்கெட்டிற்கு ஏராளமான வியாபாரிகள், பூ விவசாயிகள், பொதுமக்கள் வருகை தருகின்றனர். அவர்களுடைய இருசக்கர வாகனங்களை நிறுத்த இட வசதி இல்லாததால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, வாகனங்களை நிறுத்த இட வசதி ஏற்படுத்த வேண்டும் அல்லது பூ மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
