சிதம்பரம், நவ.22– கடலூர் மாவட்ட த்தில் உள்ள மாணவர்களிடையே யும், இளம் பெண்களிடமும் காணப்படும் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறை பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் "ரத்த சோகையில்லா கடலூர்" என்ற நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்குக் கடலூர் மாவட்ட ஆட்சி யர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமை தாங்கி னார். அவர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச் சத்து தொகுப்புகளை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு மருத்துவக் காப்பீடு திட்டத்தின் உதவி மையத்தையும் அவர் திறந்து வைத்தார். ஏன் இந்தத் திட்டம்? நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், கடலூர் மாவட்டத்தில் மகப்பேறு மற்றும் பச்சி ளம் குழந்தைகள் இறப்பு குறித்து ஆய்வு செய்த போது, ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்களிடையேயும் ரத்த சோகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதன் அடிப்படையில், மாணவ, மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இரத்த சோகை இல்லாமல் உருவாக்கும் வகையில் இந்த ஊட்டச் சத்து தொகுப்புகள் வழங்கப் படுவதாகக் கூறினார். இவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு அனைவரும் உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, பயிற்சி ஆட்சியர்கள் மாலதி, சார்ஜ், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் மணிமேகலை, மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
