districts

img

கீழகொல்லையில் துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி

கடலூர், நவ.22- மாணவர்களிடம் அறிவியலை கொண்டு சேர்க்கும் செயல்பாடுகளில் ஒன்றாக “ துளிர் - ஜந்தர் மந்தர் வினாடி வினா “போட்டி மாவட்ட அளவில் கீழ கொல்லையில் அமைந்துள்ள நேஷனல் கல்வியியல் கல்லூரியில்  நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பி.தனலட்சுமி தலைமை வகித்தார். இணைச்செயலாளர்  எஸ்.பரிமளா வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.தாமோதரன் , கல்லூரி முதல்வர் ஆஷா ரோசலின், மாநிலச் செயலாளர் எஸ். ஸ்டீபன்நாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினர். அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து ஜூனியர், சீனியர் மற்றும்  சூப்பர் சீனியர் என மூன்று நிலைகளில் ஒன்றிய அளவில் தேர்வு செய்யப்பட்ட  மாணவ குழுக்கள்  கலந்து கொண்டது. முதல் மற்றும்  இரண்டாம் இடம் பிடித்த மாணவர்கள் வரும் 30ஆம் தேதி  நெய்வேலியில் நடைபெற இருக்கும் மாநில  வினாடி வினா போட்டியில் கலந்து கொள்கின்றனர்.