districts

2002, 2005 ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும்

கடலூர், நவ.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட  செயற்குழு  கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.வாஞ்சிநாதன் தலைமையில் கடலூர் சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர்  கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெற்று வருகின்றன 80 சதவீத  படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  இன்னும் பல கிராமங்களுக்கு  வார்டுகளில் பல வீடுகளுக்கு  படிவம் வழங்கப்படவில்லை. வழங்கப்பட்ட வீடுகளில் முழுமையாக அனைவருக்கும் வழங்கப்படவில்லை பிஎல்ஓ அதிகாரிகள் முழுமையாக பணியில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. காலை அவர்கள் அங்கன்வாடிகளுக்கு சென்று விட்டு மாலை மட்டுமே இந்த பணியை செய்யும் நிலை உள்ளது. விளக்கம் கேட்கும் மக்களுக்கு முறையாக விளாக்காமால்  படிவத்தில் பெயர் எழுதி கையெழுத்து மட்டும் போட்டு கொடு என்று சொல்லும் நிலை உள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சரிசெய்ய ஏற்பாடு செய்திட வேண்டும். 2002  வாக்காளர் பட்டியல் அடிப்படை யில் பூர்த்தி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் . அரசியல் கட்சிகளுக்கு 2002- 2005 வாக்காளர் பட்டியல்  வழங்க ஏற்பாடு செய்திட வேண்டும். சனி, ஞாயிறு அனைத்து வாக்குச்சாவடி களிலும் சிறப்பு முகாம்களை நடத்தி படிவங்களை கொடுக்கவும் படிவங்களை பூர்த்தி செய்யவும் ஏற்பாடு செய்திட வேண்டும். இதுவரை கடலூர் மாவட்டத்தில் 34 சதவீத படிவங்கள் மட்டுமே கம்ப்யூட்டரில் ஏற்றப்பட்டுள்ளது. இன்னும் பத்து நாட்களில் இந்த பணியை பூர்த்தி செய்ய முடியாது எனவே இதற்கான காலத்தை நீடிப்பதற்கு தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுக்க வேண்டும். பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியத்தை படிகளை உயர்த்தி வழங்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.